தமிழ்நாடு

மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்!

DIN

மாண்டஸ் புயல் 180 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிமை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

180 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது  காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT