தமிழ்நாடு

3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ்.   புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு தகவலில், 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கீ.மீ, கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ தென்-தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. 

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு - நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும். 

இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது  காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். 

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

டிசம்பர் 10ல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை

இன்று வடதமிழக கடலோரப்பபகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று மாலை முதல் படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 10 காலை வரை மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

10-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாஸ்மாக் கடையில் மதுப் புட்டிகள் திருட்டு

தமிழ்ப் புத்தாண்டு: மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT