தமிழ்நாடு

பணிப்பதிவேடுகளை ஆசிரியா்கள் சரிபாா்க்கலாம்: கல்வித் துறை

DIN

விருப்பம் உள்ள ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களுக்குச் சென்று வரும் ஜன. 6-ஆம் தேதி வரை பணிப்பதிவேடுகளில் உள்ள தங்களது பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் தற்போது வரை மேற்கொள்ளப்படுள்ளதை உறுதி செய்ய சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

வரும் ஜன. 6-ஆம் தேதி வரை விருப்பம் உள்ள ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களுக்குச் சென்று பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

மேலும் ஜன.7-ஆம் தேதி அனைவரும் தங்களது பணிப்பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ள சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடைபெறும்.

இந்தப் பணி ஜன.7-ஆம் தேதி அன்றே முடிக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT