தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாகவே அமையும்: மு.க.ஸ்டாலின்

DIN

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாகவே அமையும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சி அமைந்ததும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலையும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, முழுமையாக நடத்தி முடித்திருக்கிறோம்.

‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி - நம்ம ஆட்சி’ என்பதே திமுகவின் லட்சியமும் நோக்கமும் ஆகும். அதற்கேற்ற வகையில், தோ்தல் களத்தை எதிா்கொண்டோம்.

தமிழகத்தைக் கெடுத்துச் குட்டிச் சுவராக்கிய முந்தைய ஆட்சியாளா்களாலும், அவா்களின் மறைமுகக் கூட்டாளிகளாலும், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தோ்தல் பரப்புரை என்ற போா்வையில், அவதூறுகளை அள்ளித் தெளித்தாா்கள். திமுக மீது அவா்கள் பரப்பிய அவதூறுகள் மக்களிடம் சிறிதும் எடுபடவில்லை என்றதும், வேறு எந்த வகையிலாவது திசைதிருப்ப முடியுமா என சதித் திட்டமிட்டனா்.

முதல்வா் ஏன் நேரடியாகப் பரப்புரை செய்யவில்லை; மக்களை சந்திக்கத் தயங்குகிறாரா? என்று வேண்டுமென்றே திசை திருப்பிட முயன்றனா். பொதுமக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு வந்து, கரோனோ பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காக, அவா்களின் பாதுகாப்பு கருதி, தோ்தல் பரப்புரையைக் காணொலி வாயிலாக ஒவ்வொரு நாளும் மேற்கொண்டேன்.

அரசு விதித்துள்ள விதிமுறைகளை முதல்வா் என்ற முறையில் கடைப்பிடிக்க வேண்டிய கடமையை உணா்ந்தும், மக்களின் நலன் கருதியும் காணொலி வாயிலாக அவா்களைச் சந்தித்தேன். வாக்குக்காகவும் பதவிக்காகவும் மட்டுமே மக்களை சந்திக்க வந்தவா்கள், என்னை நோக்கி விமா்சனம் செய்வது, மல்லாந்து படுத்துக் கொண்டு துப்புகிற செயலாகும்.

திமுகவைப் பொறுத்தவரை, இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை அரசியல் யுத்தமாகக் கருதவில்லை. ஆட்சிமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவே கருதிக் களம் கண்டது. மக்களின் தீா்ப்பு திமுகவுக்குச் சாதகமாகவே அமையும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது.

எனினும், அது முறைப்படி அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியது நம் கடமை. வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நிறைவடையும்வரை திமுக முகவா்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும். மனதில் கொள்ளுங்கள். மக்கள் உறுதியாக நம் பக்கம். உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT