தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயில் தமிழகத்தின் சொத்து: முதல்வர் ஸ்டாலின்

DIN


திருவண்ணாமலை: திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு உள்ளது. அண்ணாமலையார் கோயில் தமிழகத்தின் சொத்து என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் ரூ.70.21 கோடியில் முடிவுற்ற 91 திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலையை தனி மாவட்டமாக உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுக ஆட்சியில்தான் திருவண்ணாமலை மாவட்டம் புத்தெழுச்சி பெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது திமுக ஆட்சியில்தான். திருவண்ணாமலையில் நடைபெற்ற இடைத்தேர்தல்தான் 1967ல் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக இருந்தது என்றும் ஸ்டாலின் கூறினார்.

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் அரசியல் வியாதிகள், அரசியல் போலிகள். அண்ணாமலையார் கோயில் என்பது தமிழகத்தின் சொத்து. அதனைக் கட்டிக் காத்தது திமுக அரசு. திமுக ஆட்சியின்போதுதான் அண்ணாமலையார் கோயில் பணிகள் நடைபெற்றன. மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இது தெரியாது.  திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக, திமுக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT