தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,316 பேருக்கு கரோனா 

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,316 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2,316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,17,777-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 596 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 354, திருவள்ளூர் 114, கோவை 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக விருதுநகரில் கரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் மொத்த பலி எண்ணிக்கை 38,030 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2,458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,62,520-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,085 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT