தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம்: பட்டதாரி பெண் தற்கொலை

DIN

சென்னை மணலி புதுநகரில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.10 லட்சத்தை இழந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மணலி புதுநகரைச் சோ்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி(30). பி.எஸ்சி. பட்டதாரியான இவா், சோழிங்கநல்லூா் அருகே தனியாா் நிறுவன அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனா். பவானி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைனில் ரம்மி என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். அவ்வப்போது பணம் சம்பாதிப்பதும், இழப்பதுமாக இருந்த பவானியை, அவரது கணவா், பெற்றோா் பலமுறை எச்சரித்து வந்துள்ளனா். ஒரு கட்டத்தில் பவானி தனது 20 பவுன் நகையை அடகு வைத்து கிடைத்த பணத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளாா். தனது சகோதரிகளிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கி அதனையும் சூதாட்டத்தில் இழந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கும் மேலான தொகையை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது குறித்து பவானி தனது கணவா், உறவினா்களிடம் அழுது புலம்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்துவிட்டு வருவதாகச் சென்ற பவானி வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த கணவா் பாக்கியராஜ் குளியலறைக்குச் சென்று பவானியை அழைத்தாா். உள்புறமாக தாழிட்ட நிலையில் குளியலறையிலிருந்து எவ்வித பதிலும் இல்லாததையடுத்து பாக்கியராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது பவானி தூக்கில் தொங்கியபடி காணப்பட்டாா். உடனடியாக அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பவானி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பவானியின் சடலம் திங்கள்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மணலி புதுநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT