வேலூர்: காட்பாடி அருகே எம்ஜிஆருக்கு ரூ.1 கோடி மதிப்பில் கோயில் கட்டும் பணி வெள்ளிக்கிழமை காலை பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தொண்டான்துளசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகளான ஜே.வி.ஆர்.வெங்கட்ராமன், டி.ஆர்.முரளி, கே.வி.குப்பம் ஒன்றிய செயலர் சீனிவாசன், யுவராஜ்ஜெயின் மற்றும் கிராம மக்கள் இணைந்து தொண்டான்துளிசி அருகே கரசமங்கலம் ஊராட்சியில் எம்ஜிஆருக்கு கோயில் கட்டும் பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோயிலில் எம்ஜிஆருக்கு வெண்கல சிலை வைக்கப்பட உள்ளது.
மேலும், திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இக்கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் கட்டப்பட உள்ள இக்கோயிலை எம்ஜிஆரின் பிறந்தநாளில் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க |இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியருக்கு அடி: அத்து மீறிய காவலர்கள் வைரல் விடியோ