தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்! கரோனா அபாயம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறி முறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி எச்சரிக்கை.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு,  கோயம்புத்தூரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று வரை 172 நபர்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.

அவ்வகையில் இன்று முதல் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பெரிய வணிக நிறுவனங்களில் குளிர்சாதன இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும்,  இறப்பு நிகழ்ச்சிகளில் 50 நபர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் முதல் கட் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்

மாவட்ட ஆட்சியர் அறிக்கை முழு விபரம்: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசாபர்நகர் உணவக உரிமையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: அகிலேஷ்

பழுப்பு நிறத் தேவதை...! சோனாக்‌ஷி சின்ஹா..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

சென்னை பாலியல் வழக்கில் முன்னுதாரணமாக மாறிய தீர்ப்பு!

கடின உழைப்பு வீணாகாது..! ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT