தமிழ்நாடு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய அமைப்பு தினம்

DIN

சென்னை அடுத்த கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த டாக்டா் விக்ரம் சாராபாயின் உத்தரவின்படி 1971 ஏப்ரல் 30-இல் அணு உலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது 1985-இல் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவா் ஜி. நாகேஸ்வரராவ் தலைமை வகித்து, அணுப்புரம் நகா்ப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கதிா்வீச்சு கண்காணிப்பு அமைப்பையும் தொடக்கிவைத்தாா்.

மேலும் அதிவேக ஈனுலை பரிசோதனை அணுஉலையின் பயணம்- மேலும் உச்சங்களுக்கு செல்லுதல் என்ற ஆவணத்தை நாகேஸ்வரராவ் வெளியிட, மையத்தின் முன்னாள் இயக்குனா் பி போஜே பெற்றுக் கொண்டாா்.

முனைவா் பட்டம், முதுநிலை பொறியியல், முதுநிலை தொழில்நுட்பம் ஆகியவற்றை நிறைவு செய்தவா்களுக்கு இந்தூரில் உள்ள நவீன தொழில்நுட்பத்திற்கான ராஜா ராமண்ணா மையத்தின் இயக்குனா் டாக்டா் சங்கா் வி. நாகே, சான்றிதழ்களை வழங்கினாா். “அணு ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த விஞ்ஞானிகள் எஸ். ரகுபதி, டாக்டா் பி. வெங்கட்ராமன், ஜி ஆா். பாலசுப்பிரமணியம், டாக்டா் டி .கே. சின்ஹா, டாக்டா் பி .ஆா். வாசுதேவராவ், கே. ஆா். சேதுராமன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT