தமிழ்நாடு

சைகை மொழி! பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

DIN

பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஜி.ஆர் எனும் நூலையும் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் ஜானகி ராமச்சந்திரன். ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 20 ஆண்டு காலம் திமுகவில் பயணித்தவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை விட திமுகவில் தான் எம்.ஜி.ஆர். அதிக காலம் இருந்தார். 

பள்ளிக் காலத்தில் நன்கொடை வசூலுக்காக முதலில் எம்.ஜி.ஆரிடம் செல்வேன். பெரியப்பா என்ற முறையில் நான் சொல்கிறேன். நன்றாகப் படிக்க வேண்டும் என எனக்கு அறிவுரை வழங்குவார்.  

எம்.ஜி.ஆருடன் இளமைப்பருவம்:

என் மீது அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். 

எம்.ஜி.ஆர். படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்ப்பதே எனக்கு வழக்கமாக இருந்தது. படம் வெளியான உடனே அதுகுறித்து என்னிடம் கருத்து கேட்பார். 

சைகை மொழிப்பாடம்:

பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT