தமிழ்நாடு

மன்னார்குடி அருகே மதுக்கடை திறக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டூரை மையப்படுத்தி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.கோட்டூரில் மாநில நெடுஞ்சாலையில் இரண்டு அரசு மதுக்கடை இருந்து வந்த நிலையில். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சில ஆண்டுக்கு முன் அந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டு ராயநல்லூர்,குன்னியூர் ஆகிய பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து,கோட்டூர் முள்ளியாறிலிருந்து அடப்பாறு பிரியும் இடத்தில் தனியார் ஒருவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டி வாடகைக்கு அதில் அரசு மதுக்கடை அமைக்க அனுமதி அளித்தார். இந்த இடத்தில், மதுக்கடை அமைக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.வேறு சில அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் மதுக்கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இது தொடர்பாக,கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதரப்பினரும் சாலை மறியல் உள்ளிட்ட பலவேறு போராட்டங்களை நடத்துவதும், இவர்களிடம் வருவாய்த்துறை, காவல்துறை, டாஸ்மார்க் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. கோட்டூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வலுவாக இருப்பாதல் இதுநாள் வரை மதுக்கடை திறக்க முடியாமல் பிரச்னை தீர்வு காணமுடியாது நீண்டுகொண்டு வருகிறது.

இந்நிலையில்,கோட்டூர் வர்த்தக சங்கத்தின் சார்பில்.கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால். இப்பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுப்பாட்டிகள் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால், மாலை நேரங்களில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வரத் தயக்கம் காட்டுவதாலும், மதுப்பிரியர்களும் மதுக்கடை உள்ள மற்ற ஊர்களுக்கு சொன்று விடுவதால் அவர்கள் சார்ந்த பொருள் விற்பனை செய்யும் கடைக்காரர்களும் வியாபாரம் இல்லாது கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில்,கோட்டூரில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் பாதிக்காத வகையில் ஏதாவது ஒரு இடத்தில் அரசு மதுக்கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல், விலை ஆகியவற்றின் விலைஉயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோட்டூர் வர்த்தக சங்கம் சார்பில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து,கோட்டூரில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளில் சிபிஐ கட்சியினர் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருந்துக்கடைகளுக்குப் போராட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

வழக்கம் போல் பொது போக்குவரத்து நடைபெற்றது. அரசு,தனியார் அலுவலகங்கள்,வங்கிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டது.

இது குறித்து, கோட்டூர் வர்த்தக சங்கச் செயலர் டி.ஜெயம் செய்தியாளர்களிடம் பேசியது, 

தமிழ்நாடு முழுவதும் பூர்ண மதுவிலக்கு கொண்டு வரவேண்டாம் என்பதுதான் எங்களது நோக்கம். எங்களது வியாபாரம் பாதிக்கும் வகையில்அருகிலில் உள்ள கிராமங்களில் அரசு மதுக்கடை திறந்து இருப்பதுதான் இப்போதைய பிரச்னை.ஏற்கனவே, இருதரப்பினருக்கு இடையே மதுக்கடை அமைய இருக்கம் இடம் குறித்த சர்ச்சையில் தலையிட விரும்பவில்லை.கோட்டூரில் நகரப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் அரசு மதுக்கடையைத் திறக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT