உதடுகளில் திறக்குறள், பாரதி.. உள்ளத்திலோ இந்திவெறி.. சு. வெங்கடேசன்
இந்தியில் மசோதாக்களின் பெயர்களை மாற்றிய ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: உதடுகளில்தான் திருக்குறள், பாரதி.. ஆனால் உள்ளத்திலோ முழுக்க இந்திவெறி என்று, இந்தியில் மசோதாக்களின் பெயர்களை மாற்றிய ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவற்றை தாக்கல் செய்தாா்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், இந்திய ஆதாரச் சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் மசோதாக்களின் பெயர்களை அமைத்திருக்கும் மத்திய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச சன்கிதா, பாரதீய சாக்சிய...
கடைசிநாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல்.
இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு.
உதடுகளில் திருக்குறள்...பாரதி...
உள்ளம் முழுக்க இந்திவெறி.
பாஜகவின் உண்மை முகம் என்று பதவிட்டு, மசோதாக்களின் விவரம், பிரதமர் மோடி, திருவள்ளுவர், பாரதியார் புகைப்படங்களையும் பதிவுடன் இணைத்திருக்கிறார்.