தமிழ்நாடு

இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் அதிமுக!

DIN

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை அதிமுகவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்து, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரி மனு அளிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

SCROLL FOR NEXT