தமிழ்நாடு

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்: கல்வித் துறை புதிய உத்தரவு

DIN

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இனிவரும் காலங்களில் வெள்ளிக்கிழமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (எஸ்.எம்.சி) நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளா்களை உள்ளடக்கிய 20 உறுப்பினா்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. இதுதவிர பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாதந்தோறும் முதல் வாரத்திலேயே எஸ்எம்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

‘பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் எஸ்எம்சி கூட்டம் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

பிப். 3-இல் நடைபெறும்: அதன் அடிப்படையில் வரும் மாதத்துக்கான பள்ளி மேலாண்மை குழுக் கூட்டமானது பிப்ரவரி 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும். இதே நடைமுைான் இனி மாதந்தோறும் தொடரும். அதற்கேற்ப ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாகவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

வெளியே வருவாரா அரவிந்த் கேஜரிவால்? இன்று தெரியும்

SCROLL FOR NEXT