திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்த நாளையொட்டி திருவாரூரில் திமுக சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அவைத் தலைவர் சூரியகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை, திருவாரூரில் சிறப்பாக கொண்டாடும் வகையில் சந்நிதி தெருவில் உள்ள கலைஞர் இல்லம், திமுக நகர அலுவலகம், சட்டப்பேரவை அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஒடிசா ரயில் விபத்து காரணமாக விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மிக எளிமையான முறையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டுமே நடைபெற்றது.