500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூடப்படும் 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பட்டியல் தயாரானதும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புக்காக மதுக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.