மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1341 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1805 கன அடியிலிருந்து 1341 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.73 அடியிலிருந்து 103.70 அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: ஒடிஸா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 101 உடல்கள்!
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டிஎம்சியாக உள்ளது.