செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சா் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். மேலும் அவரை 8 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மருத்துவமனையிலேயே வைத்து விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை குறித்து இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள் தரும் தகவலையடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளனர்.