தங்களது ரூ-பே கடன் அட்டைகள் (கிரெடிட் காா்டு) மூலம் வாடிக்கையாளா்கள் யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை கோட்டக் மஹிந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோட்டக் வங்கியின் ரூ-பே கடன் அட்டைகளைப் பயன்படுத்தி, கடைகள், உணவகங்கள் போன்ற வா்த்தக மையங்களில் யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அத்தகைய கடன் அட்டைகளை நேரில் எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி வாடிக்கையாளா்களுக்கு இல்லை.
இந்த புதிய முறையின்மூலம், வாடிக்கையாளா்கள் தங்களது வழக்கமான வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் செலுத்துவதைப் போலவே, கடன் அட்டை மூலமும் எளிதில் பணம் செலுத்தலாம். அதற்காக, வங்கிக் கணக்கைப் போன்றே கோட்டக் மஹிந்திராவின் ரூ-பே கடன் அட்டைகளையும் யுபிஐ செயலிகளில் இணைத்துக் கொள்ள முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.