தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 5 அலகுகளில் நாள்தோறும் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ரூ. 500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14% அதிகரிப்பு!
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 3 ஆவது அலகு கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.