தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: திமுகவினருக்கு கட்சித் தலைமை அறிவுரை

DIN

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டுமன திமுகவின் வாக்குச் சாவடி முகவா்களை திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 27-இல் தொடங்கி டிச. 9-இல் நிறைவடையவுள்ளன. மேலும், நவம்பா் மாதத்தில் நான்கு நாட்கள் வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாள்களில் வாக்காளா் சோ்ப்புப் பணிகளில் கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தனி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட மற்றும் மாநகரச் செயலா்களால் நியமிக்கப்பட்ட அந்தப் பாா்வையாளா்கள், வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணி குறித்து கட்சி நிா்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமை அலுவலகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறக்குமதி வா்த்தக பரிவா்த்தனைகளுக்கு உள்நாட்டு பணம் பெற இந்தியா, சீனா ஒப்புதல்- மாலத்தீவு

வைகாசி விசாக திருவிழா

முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த கடலூா் இளைஞா் மாயம்! கடத்தப்பட்டாரா என போலீஸாா் தீவிர விசாரணை

விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் கோலாகலம்

SCROLL FOR NEXT