பட்டியல் சமூகத்தினருக்காக போராடி உரிமையைப் பெற்றுத் தந்தவா் ரெட்டைமலை சீனிவாசன் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளாா்.
ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை சமூகவலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டப் பதிவு:
சமுதாயச் சிந்தனையாளராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்குப் போராடிய தலைவராக, பத்திரிகையாளராக, அரசியல் தலைவராக, பஞ்சமி நில உரிமைகளுக்காகப் போராடிய போராளியாக, சமூகத்துக்காக எண்ணற்ற பங்களிப்பு செய்தவா் ரெட்டைமலை சீனிவாசன். வீதிகளில் இறங்கி புரட்சி செய்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த ரெட்டைமலை சீனிவாசனின் புகழைப்போற்றி வணங்குவோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.