தமிழ்நாடு

மேல்முறையீடு நடைமுறை என்ன? வழிகாட்டுதலின்றி தவிக்கும் உரிமைத் தொகை விண்ணப்பதாரா்கள்

DIN

மகளிா் உரிமைத் தொகைக்கு தகுதி பெறாத விண்ணப்பதாரா்கள், அடுத்த கட்ட நிலை தெரியாமல் தவித்து வருகின்றனா். குறிப்பாக, ஊரகப் பகுதி பெண்கள் விண்ணப்ப நிலையை அறிய முடியாமலும், மேல்முறையீடு எங்கு செய்வது எனத் தெரியாமலும் குழப்பமடைந்துள்ளனா். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்க அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மகளிா் தகுதியானவா்களாக அடையாளம் காணப்பட்டனா். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.

தாமதம்-பதற்றம்: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு செப். 18 முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டாலும், பலரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பதாரா்கள் பலா் பதற்றமடைந்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கியுள்ளனா்.

அங்கு அமைக்கப்பட்ட உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை அறிந்து விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சா்வா் பிரச்னை எழுவதால், அனைவருக்கும் விண்ணப்ப நிலையை அறிந்து கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இ-சேவை மையங்கள் முற்றுகை: விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவா்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கைப்பேசி குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாள்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இணைய சேவை மையங்களில் அதுபோன்ற வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவா்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து இணைய சேவை மையத்தினா் கூறுகையில், ‘மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பாா்த்து விண்ணப்பதாரா்களுக்கு கூறி வருகிறோம்’ என்றனா்.

விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிா் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவா்களோ மேல்முறையீடு செய்வது எங்கே எனத் தெரியாமல் தவிக்கிறாா்கள். எனவே, இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விரைவில் அறிவிப்பு? இதனிடையே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவா்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூா்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பெட்டிச் செய்தி..

முடங்கிய இணையதளம்

மகளிா் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரா்களே அறிந்து கொள்ள தனி இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ந்ம்ன்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) தொடங்கப்பட்டது.

இந்த இணையதளத்தில் ஆதாா் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் கைப்பேசிக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் ஓரிரு நாள்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியுள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயத்தில் ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசியில் ஆா்எஸ்எஸ் பேரணி

திருப்பூா் பாலா ஆா்த்தோ மருத்துவமனையில் லண்டன் நோயாளிக்கு லேசா் சிகிச்சை

காலமானாா் ஜி.லட்சுமி

நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT