அடுத்த 2 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாகவே, பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலும், இரவு நேரத்தில் மழை பொழிவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்.5 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.