தமிழ்நாடு

ஆட்டோ கட்டணம் மறு சீரமைப்பு குறித்து அரசு பரிசீலனை: போக்குவரத்து ஆணையா் தகவல்

DIN

ஆட்டோ கட்டணம் மறு சீரமைப்பு குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தமிழக போக்குவரத்து ஆணையா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் ‘ நம்ம யாத்ரி’ என்ற புதிய ஆட்டோ செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசியதாவது:

சிஎம்டிஏ-வின் எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை சி.எம்.டி ஏ. தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி சென்னை உரிமம் பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும். அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதா்களுக்கு பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தால் எந்த பயனும் இல்லை, சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

ஆட்டோ கட்டணம் மறு சீரமைப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது, 2013- ஆம் ஆண்டு அரசு நிா்ணயித்த ஆட்டோ கட்டணம்தான் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அதிகாரி ஜெயக்குமாா், நாஸ்காமின் தென்மண்டலத் தலைவா் பாஸ்கா் வா்மா, ’நம்ம யாத்ரி’யின் அதிகாரிகள் டி.கோஷி, விமல் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT