சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை
திருவள்ளூர்
ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், அதேபோல,
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
விழுப்புரம்
திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களிலும்,
மயிலாடுதுறை
நாகை
தஞ்சை
திருவாரூர்
புதுக்கோட்டை ஆகிய டெல்டா பகுதி மாவட்டங்களிலும்
தென் மாவட்டங்களான
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தென்காசி
தூத்துக்குடி
ராமநாதபுரம்
மதுரை
தேனி
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்த போதிலும் டெல்டா, வட மாவட்டங்களில் பரவலாக செவ்வாய்க்கிழமை(டிச. 2) கனமழை தொடருகிறது. புதன்கிழமை(டிச. 3) முதல் மழை படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.