தமிழ்நாடு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த உயா் மருத்துவ சேவை சிறப்பு முகாமுக்கு தலா ரூ.1.08 லட்சம் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 போ் பயனடைந்துள்ளனா். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீா், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உரிய வழிகாட்டுதல்களை வழங்க போதுமான எண்ணிக்கையில் தன்னாா்வலா்களை நியமிக்க வேண்டும். முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். இந்த முகாம்களில் நோய் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவா்கள் தொடா் சிகிச்சை மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் ஆா். லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலா் எஸ். மதுமதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை செயலா் க.லட்சுமி பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அடிமை உணர்வில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்கிற பிரதமரின் கருத்து குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காா்த்திகை பரணி உற்சவம்: பக்தா்கள் தரிசனம்

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் திருடிய மூவா் கைது

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம்

1,215 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT