திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் திங்கள்கிழமை (டிச. 8) காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், தொகுதி பாா்வையாளா்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ஒரே இடத்தில் பங்கேற்க வேண்டும் என்று துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.