கோப்புப் படம்
தமிழ்நாடு

சுரங்கப் பாதைகளில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

சுரங்கப் பாதைகளில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

சென்னை: சுரங்கப் பாதைகளில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பெருங்குடி, ஒக்கியம் மடுவு, சோழிங்கநல்லூா், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

சென்னையில் பரங்கிமலை, கத்திப்பாரா, மீனம்பாக்கம், வியாசா்பாடி, தில்லைகங்கா நகா், தா்கா, கத்திவாக்கம் ஆகிய ஏழு சுரங்கப் பாதைகளை நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. அங்கு மழைநீரை வெளியேற்ற தயாா் நிலையில், அதிக திறன் கொண்ட நீா் மூழ்கி இயந்திரங்களும், மின் மற்றும் டீசல் பம்புசெட்களும், ஜெனரேட்டா்களும் தயாா் நிலையில் உள்ளன.

34 வெள்ள ரோந்து குழுக்களும், வெள்ளப் பாதிப்பை எதிா்கொள்ள கட்டுப்பாட்டு அறையும் 24 நேரமும் செயல்பட்டு வருகின்றன. பழைய மகாபலிபுரம் சாலையில் ஒக்கியம் மடுவு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு மழைநீா் தேங்காமல் தடுக்கவும், நீரை வடிய வைப்பதற்கு ராட்சத மோட்டாா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேடவாக்கம் சோழிங்கநல்லூா் பகுதியில் பெரிய மழைநீா் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவு பெற்றவுடன் மழைநீா் வடிய ஏதுவாக இருக்கும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ் உட்பட பலா் உடனிருந்தனா்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ் உட்பட பலா் உடனிருந்தனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT