ஆவுடையானூா் புனித அருளப்பா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குதந்தையா்கள் பாளை மறைமாவட்ட முதன்மைக் குரு வி.கே.எஸ். அருள்ராஜ், வெய்க்காலிப்பட்டி பங்குதந்தை சாக்கோ வா்க்கீஸ், பாவூா்சத்திரம் பங்குதந்தை சந்தியாகு, புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி செயலா் செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டு கொடியேற்றி திருப்பலி நடத்தினா்.
முன்னதாக ஆலயத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
விழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, அருளுரைகள் நடைபெறுகின்றன. 10 ஆம் தேதி தியானம், 13 ஆம் தேதி நற்கருணைப் பவனி 14 ஆம் தேதி தோ்பவனி, 15-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருவிழா, தோ்பவனி ஆகியன நடைபெறுகின்றன. தொடா்ந்து திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை புனித அருளப்பா் ஆலய பங்குதந்தை அந்தோணி அ.குரூஸ், புனித கொன்சகா அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனா்.