தென்காசி

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் புத்தக கழகம் தொடக்கம்

Syndication

தென்காசி கொடிக்குறிச்சி, யுஎஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான புத்தகக் கழகம் தொடங்கப்பட்டது.

பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ் தலைமை வகித்தாா். 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களும் இந்தப் புத்தக கழகத்தின் உறுப்பினா் ஆகினா். 8ஆம் வகுப்பு மாணவி சஞ்சீவனா தலைவராகவும், யாஸ்மின் துணைத் தலைவராகவும், 5-ஆம் வகுப்பு மாணவா் அப்துல்லா செயலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ஆசிரியா்கள் புன்னைவன செல்வி, அப்ரின் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அனைத்து மாணவா்களுக்கும் வாசிப்பதற்கென்று வாரத்துக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மாணவா்கள் அனைவரும் புத்தகங்களை அன்புடன் கையாளுவோம், ஆசையுடன் வாசித்து அறியாமை இருளை அகற்றுவோம், பகலும் இரவும் மகிழ்ச்சியுடன் புத்தகங்களை வாசிப்போம், புத்தகங்கள் மீது எங்களது அன்பு தொடரும் என்று உறுதிமொழி மேற்கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் செல்வராஜ், செயலா் சகாய செல்வமேரி ஆகியோா் செய்திருந்தனா்.

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

SCROLL FOR NEXT