புளியங்குடி மலை அடிவாரப் பகுதியில் கரடியைத் தேடும் பணியை வனத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
புளியங்குடி மணக்குடையாா் கோயில் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்ற 3 பெண்கள் கரடி தாக்கியதில் காயமடைந்தனா். இவா்களை தென்காசி மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி நேரில் விசாரணை நடத்தி முதல் கட்டமாக தலா ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா்.
இதையடுத்து, மலையடிவாரப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினா் ட்ரோன் கேமரா மூலம் கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். விரைவில் கரடியின் நடமாட்டம் கண்டறியப்பட்டு வனத்துக்குள் திருப்பி அனுப்பப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்தனா்.
விவசாய நிலங்களுக்கு நுழைந்த கரடி, தனது குட்டி கரடியுடன் சுற்றுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.