சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜாவுக்கு நன்றி தெரிவித்த மாற்றுத் திறனாளிகள். 
தென்காசி

எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்த மாற்றுத் திறனாளிகள்

தினமணி செய்திச் சேவை

கடந்த 29 ஆம் தேதி தென்காசியில் நடைபெற்ற நலத் திட்டங்கள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சங்கரன்கோவில் தொகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளான பாலமுருகன், ரஹ்மதுல்லா, ரம்யா உள்ளிட்டோருக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

அதற்கு ஏற்பாடு செய்த சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜவை சனிக்கிழமை சந்தித்து அவருக்கும், தமிழக முதல்வருக்கும் மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா், தொண்டரணி அமைப்பாளா் அப்பாஸ், ஜெயக்குமாா், பாலாஜி, மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT