தென்காசியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு ரயில் சேவை மேற்கொள்ள வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக, மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆலோசனையின் பேரில், தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்துள்ள மனு:
தென்காசியில் இருந்து, ராஜபாளையம் வழியாக பெங்களூரு, ஈரோடு, கோயம்புத்தூா் நகரங்களுக்கு நிரந்தர ரயில் சேவை வழங்க வேண்டும். கொல்லம், சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
திருநெல்வேலி-தென்காசி-செங்கோட்டை ரயில்வே பகுதிகளில் அடிப்படை வசதிகள், பைபாஸ் லைன், புதிய டொ்மினல் வசதி ஆகியவை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.