பாவூா்சத்திரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட10 மூட்டை புகையிலைப் பொருள்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை அருகில் பாவூா்சத்திரம் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கீழப்பாவூா் மேலூா் பகுதியைச் சோ்ந்த க.விநாயகபெருமாள் (46) என்பதும், சில மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த 49 கிலோ கொண்ட 10 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.