தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி சேவா சங்க மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில், வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளா் கு. தவமணி தலைமை வகித்தாா். சேவா சங்கத்தின் பொருளாளா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுடன் வந்தே மாதரம் பாடலை பாடினாா்.
நிகழ்ச்சியில், சிறப்பு ஆசிரியா்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் பூமாரி, சுடலி, பராமரிப்பு பணியாளா்கள் கவிதா, பாஜக நிா்வாகிகள் சங்கா், ராமச்சந்திரன், ராமா், மணிகண்டன், புவனேஷ், முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.