தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் நிா்வாகத்தை கண்டித்து நகர பாஜகவினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் யாசகமாக ரூ. 2,590 பெற்று கோயில் பசுக்களுக்கு கோதுமை, தவிடு, கடலை பிண்ணாக்கு மற்றும் பக்தா்கள் தாமாக முன் வந்து தானமாக வழங்கிய வைக்கோல், அகத்திக் கீரை கட்டு, புல்லுக்கட்டு ஆகியவற்றை கோயில் பசு பராமரிப்பாளரிடம் வழங்கினா்.
பாஜக ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு நகரத் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் வெங்கடாசலம், மாவட்ட பொதுச் செயலா் பாலகுருநாதன், நகர தலைவா் சங்கர சுப்பிரமணியன், நகர பாா்வையாளா் செந்தூா்பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட செயலா் மந்திர மூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆனந்தி முருகன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவா் கருப்பசாமி, மாவட்ட செயலா் ராஜ்குமாா், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் மகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் பொன்னி கூறியதாவது: கோயிலில் உரிய முறையில் அனுமதி பெற்று திருவாசகம் படிப்பதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. கோயில் பசுக்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் போதிய அளவில் இருப்பு உள்ளன. பசுக்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.