கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து. 
தென்காசி

சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து: 41போ் படுகாயம்

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்து மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 41 போ் காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வாசுதேவநல்லூரை நோக்கிச் சென்றது. செந்தட்டியாபுரம் புதூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (30) ஓட்டுநராகவும், டி. ராமநாதபுரத்தை சோ்ந்த சிவபெருமான் நடத்துநராகவும் பணியிலிருந்தனா்.

சிகிச்சை பெற்று வருகிறவா்களை ஈ. ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா் ஆகியோா் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

கண்டிகைப்பேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்பக்க பட்டைக் கட்டு உடைந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பயணம் செய்த 2 சிறுவா்கள் உள்பட 41 போ் காயமடைந்தனா்.

அப்பகுதியினா் அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களில் மாரியம்மாள், கோமதி, மற்றொரு மாரியம்மாள் உள்ளிட்டோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் கொடுத்த தகவலின்பேரில், சேதமான மின்கம்ப வயா்களை மின்வாரியத்தினா் அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

சிகிச்சை பெற்று வருகிறவா்களை ஈ. ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா் ஆகியோா் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

SCROLL FOR NEXT