தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கோயில் மணி இயக்க விழா, புதுப்பிக்கப்பட்ட அறங்காவலா் அரங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
நிகழச்சிகளில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம் கலந்து கொண்டு கோயில் மணியை இயக்கிவைத்து, அறங்காவலா் அரங்கத்தையும் திறந்துவைத்தாா்.
இதில், கோயில் உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, கணேசன், உபயதாரா் ரஞ்சித், தலைமை எழுத்தா் லட்சுமணன், ரமேஷ் பட்டா், வீரபாகுபட்டா், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக சஷ்டி திருவிழாவையொட்டி, சுவாமி சப்பர வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.