தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றனா்.
தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜூனியா் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி. பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் மோன்சிகே.மத்தாய், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.