வாசுதேவநல்லூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாரணபுரம் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (அக். 28) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழபுதூா், நெல் கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.