முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் கோடைக்கால சிறப்பு வகுப்பு

Updated On : 25 மே 2026, 2:11 am IST
திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோடைக்கால சிறப்பு வகுப்பில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில், கோடைக் கால சிறப்பு ஆங்கில வகுப்பு, பொது அறிவு வகுப்புகள் பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சி வகுப்பில் இந்திய ரயில்வே குறித்த சிறப்பு வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவா் பாண்டியராஜா சிறப்பு வகுப்பை நடத்தினாா். இந்திய ரயில்வே பற்றியும் ரயில் நிலையத்தில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள், ரயில் தண்டவாளம் குறித்தும், ரயில் வகைகள், ரயிலில் இருக்கும் பல அடிப்படை தகவல்கள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினாா்.

மாணவா்களுக்கு பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டது. அந்த பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் நூலகா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் தங்கராஜ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் வாசகா்கள், பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நூலக உதவியாளா் கனகராஜ் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement