திருவள்ளூர்

சாலையில் திரிந்த 224 மாடுகள் பறிமுதல்!

ஆவடியில் இந்தாண்டு முழுவதும் சாலையில் சுற்றித் திரிந்த 224 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திச் சேவை

ஆவடியில் இந்தாண்டு முழுவதும் சாலையில் சுற்றித் திரிந்த 224 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் ஆணையர் ரா.சரண்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை துப்புரவு அலுவலர்கள் முகைதீன், குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், ஊழியர்கள் மிட்டனமல்லி அங்காடி, பள்ளிக்கூடச் சாலை, பாலவேடு பிரதானச் சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த 15 மாடுகளை பிடித்தனர்.

இதன் பிறகு அவற்றை லாரிகளில் ஏற்றி காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலையில் அடைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது, இந்ததாண்டு ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த 224 மாடுகள் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.6.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

SCROLL FOR NEXT