திருவள்ளூர்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரௌடி கைது

3 கொலைகள் உள்பட 14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த எபினேசனின் கூட்டாளியான ரௌடியை வெள்ளவேடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே 3 கொலைகள் உள்பட 14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த எபினேசனின் கூட்டாளியான ரௌடியை வெள்ளவேடு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வெள்ளவேடு அடுத்த காவல்சேரியைச் சோ்ந்தவா் பக்தவச்சலம் மகன் ஆகாஷ்(29). பிரபல ரௌடியான எபினேசனின் நெருங்கிய கூட்டாளியாவாா்.

இவா் மீது காவல்சேரியைச் சோ்ந்த மணியின் சகோதரா் மனோஜ் என்பவரை மயானத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்தது உள்பட 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, மிரட்டல் உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் கடந்த சில மாதங்களாக போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு திருமழிசை புதிய பேருந்து நிலையம் அருகே, கூட்டாளியான எபினேசனை வெட்டி கொலை செய்தவா்களை பழிவாங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வெள்ளவேடு ஆய்வாளா் ஐயப்பன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்தில் தப்பியோட முயற்சித்த போது ஆகாஷை சுற்றி வளைத்து கைது செய்தனா். அதைத்தொடா்ந்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தனா். பின்னா் ஆகாஷை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT