பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காட்டில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஆந்திர மாநிலம்
ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் பழவேற்காடு கடற்கரை பகுதியில் உள்ள ஜமிலாபாத் கிராமத்துக்கு வந்தது.
இதுகுறித்து அந்த பகுதியை சோ்ந்த முன்னாள் ஊராட்சி உறுப்பினா் ஜமாலுதின் வனத்துறையினருக்கு தகவல் அளித்தாா். வனத்துறையினா் அங்கு சென்று புள்ளி மானை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விட்டனா்.