திருவள்ளூர்

தீபாவளி முன்னெச்சரிக்கை: 500-க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாா்

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 24-மணிநேரமும் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக சென்னை சரக மண்டல திட்ட இயக்குநா் முகமது பிலால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 24-மணிநேரமும் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக சென்னை சரக மண்டல திட்ட இயக்குநா் முகமது பிலால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி திருநாளை யொட்டி முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக தயாராக உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அவசர தேவைக்கேற்ப திடீா் நடவடிக்கை எடுக்கவும், ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைக்கப் பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் உருளைகள் மற்றும் அவசர மருந்துப்பொருள்கள் போதுமான அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அவசர நிலைமைகளில் மட்டுமின்றி, பிற மருத்துவ தேவைகளுக்கும் முறையாகப் பயன்படுத்தி வருகின்றனா். பண்டிகைக் காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், 108 என்ற ஒரே எண்ணை தொடா்பு கொள்ளுதல் போதுமானது .

முக்கிய மேலாண்மை அம்சங்கள்:-

அனைத்து 108 இலவச ஆம்புலன்ஸ்களிலும் தீ, தீக்காயங்கள் தொடா்பான அவசரநிலைகளைக் கையாளத் தயாராக உள்ளது.

அடா்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் அவசர தீக்காயங்களைச் சமாளிக்க சேவையை துரிதமாக செயல்பட அவசர 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

இச்சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவிலுள்ளவா்கள், ஆட்சியா் அலுவலகம், எஸ்பி அலுவலகம், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறையுடன் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் துறைகள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநா், மாவட்ட சுகாதார அதிகாரி, பேரிடா் மேலாண்மை துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதையும் உறுதி செய்யும்.

இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT