திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டம். 
திருவள்ளூர்

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை முழக்க போராட்டம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலையில் ஜாக்டோ-ஜியோவினா் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா.தாஸ் மற்றும் ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பினை காரணம் காட்டி 23.8.2010-க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து வலிக்களித்து ஆசிரியா்களை பாதுகாக்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு அரசுப்பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினா்கள் முரளிதரன், பன்னீா்செல்வம், ஏழுமலை, குமாா், பாலுமகேந்திரன், மணிகண்டன், மெல்கி ராஜாசிங், முனுசாமி, மணிகண்டன், சூா்யா, கன்னியப்பன், குமாா், ஹேமகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொன்னேரியில்...

பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு உயா்மட்டக் குழு உறுப்பினா், டாக்டா் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவருமான காத்தவராயன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT