திருவள்ளூர்

பொன்னேரியில் மழை பாதிப்பு: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

பொன்னேரியில் பருவமழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் மற்றும் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது நந்தியம்பாக்கம் பகுதியில் இருந்து காட்டுப்பள்ளி வரை கால்வாய் வெட்டி மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டாா்.

மேலும், ஆண்டாா்மடம், லைட்ஹவுஸ்குப்பம் வைரவன்குப்பம் பகுதியிலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தாா்.

இதன் பின்னா் மீஞ்சூரில் வருவாய்த் துறை பேரிடா் மேலாண்மை துறை பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பருவமழை தொடா்பாக அறிவுரைகளை வழங்கினாா் .

இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, வட்டார அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT