திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், மது விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.9 லட்சத்தை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மதுவிலக்கு ஆயத்தீா்வு துறை சாா்பில் கள்ளத்தனமாக சாராயம், மது விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியயோருக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா். இதேபோல் 18 பேருக்கு மொத்தம் 9 லட்சம் காசோலைகளை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் கலால் துறை உதவி இயக்குநா் கணேசன், திறன் வளா்ப்பு பயிற்சி அலுவலா் சித்ரா, காவல் துணைக் கண்காணிப்பாளா்(விலக்கு அமல்பிரிவு) கந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.